அரியலூரில் வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-10-07 07:25 GMT

லாரியின் விளக்கு முகப்பில் போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் மாவட்டம் செந்துறை ரவுண்டானா அருகே கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

இரவு நேரங்களில் எதிரே வருபவர்களுக்கு கண்கூச கூடாது என்பதற்காக இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

மேலும் கனரக வாகன ஓட்டிகளுக்கு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்க வேண்டும்,பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கக் கூடாது,போக்குவரத்து சமிக்கைகள் சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News