வன்னியர் சங்க மாநிலச் செயலாளர், பாமக நிர்வாகி நீக்கம்

வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் மற்றும் பாமக நிர்வாகியை நீக்கி பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-02-24 13:22 GMT

வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் வைத்தி.

வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் மற்றும் பாமக நிர்வாகி நீக்கி பாமக தலைவர் ஜி.கே.மணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் வைத்தி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் மாதவன்தேவா ஆகிய இருவரும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநில இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எனவே, மேற்கண்ட இருவருடன் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்டச் செயலாளர் ரவிசங்கர் கூறுகையில், தலைமைக்கு எதிராக தனியாக ஒரு குழுவை அமைத்துக்கொண்டு செயல்பட்டு வந்தார். மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு சரியாக வேலை செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News