கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுக்க தடுப்பூசி அவசியம்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

15.01.2022தேதிக்குள்இரண்டுதவணை கொரோனாதடுப்பூசிசெலுத்திகொண்டவர்கள் முன்னெச்சரிக்கைதடுப்பூசிசெலுத்திக்கொள்ளதகுதியானவர்கள்

Update: 2022-07-16 07:17 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 18 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு 15.07.2022 முதல் 30.09.2022 வரை மாவட்டம் முழுவதும் இலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செலுத்தப்படும்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நமது மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 105.6%-இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 105.02% ஆகும். 15-18 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.91% இரண்டாம் தவணை தடுப்பூசிசெலுத்திக் கொண்டவர்கள் 88.51% ஆகும்.12-14 வயதிற்கு உட்பட்டோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111.14%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.14% ஆகும்.

இதுவரை மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 103.09% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 100.7% ஆகும். கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 99% ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 102%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 98%. முன்களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 109% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 60% முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 45% சுகாதாரப் பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 111%- இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 65% நமது மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

15.01.2023 தேதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். எனவே, 18 முதல் 59 வயது வரையுள்ள அனைவரும் இலவசமாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News