போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு

மதுமட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாயவளர்ச்சிக்கு இளைஞர்களின்பங்கு முக்கியமானதுஎன்றார் அமைச்சர்

Update: 2022-10-08 09:51 GMT

அரியலூர் போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் 

அரியலூர் – மது மட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது என போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரி. பிரதீமா பூமிக் தெரிவித்தார்.

அரியலூரில் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் குமாரி.பிரதீமா பூமிக் ஆய்வு செய்து, மையத்தின் செயல்பாடுகள், அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூறியதாவது: அப்பொழுது போதை மட்டுமே வாழ்க்கை அல்ல. போதை பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தால் நாம் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். சமுதாய மற்றும் சமூக வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் மறுவாழ்ழு  சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வெளியே செல்லும்போது சமுதாய மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நல்லவர்களோடு பழக வேண்டும் நல்லதை கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Tags:    

Similar News