பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து பள்ளி

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து பள்ளி மூலம் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-10-07 04:42 GMT

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கயர்லாபாத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படிபோக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, தினசரி சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்,நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.


கனரக வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து சமிக்ஞைகளை மதித்து வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இது தவிர பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து சமிக்ஞை பதாகைகள் மற்றும் மாதிரி சாலைகள் ஆகியவற்றைக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News