திருமானூர் பகுதிகளில் இன்றைய மின்தடை

கீழப்பழூர் பகுதிகளில் இன்று காலை 09.00 மணி முதல், நண்பகல் 12.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-26 01:42 GMT

இது குறித்து, திருமானூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் & காத்தலும்)  க.இராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில், கீழப்பழூர் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் கீழப்பழூர், வாரணவாசி, கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், மேலப்பழூர், இலந்தகூடம், குலமாணிக்கம், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, பகுதிகளில், மின்பாதை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது.

எனவே, இன்று  26.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மேற்கண்ட பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னே பணி முடிக்கப்பட்டால் உடனடியாக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று,  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News