அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர்கள் 39 பேர் கைது

அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தினர் 39 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-01-10 12:00 GMT

அரியலூர் அண்ணாசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தினர் 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் அண்ணாசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தினர் 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்று கால கட்டத்தில் முன்களப் பணியாளர்களாக கருதப்படும் சுகாதார தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத கால ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். துப்பரவு ஒப்பந்த மற்றும் சுய உதவிக் குழு தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும. ஊராட்சி தூய்மைக் காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தினக் கூலி தொழிலாளர்களுக்கு காலம் கடத்தாமல் கூலித் தொகையை வழங்க வேண்டும் . ஒப்பந்த தினக் கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் முழக்கமிட்டனர்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினர், கொரோனா தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர். போராட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஆர்.தனசிங்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை, தா.பழூர் ஆகிய பகுதிகளில் பணிப்புரியும் தினக் கூலி துப்பரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News