அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் உண்டியல் திருட்டு

ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் திருட்டு

Update: 2022-08-03 13:46 GMT

வயல் வெளியில் கிடக்கும் கோவில் உண்டியல்

ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் திருட்டு.

அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே தொட்டிகுளம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம். அந்த பகுதியில் உள்ள இந்த அம்மன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கோவில் பூசாரி பாவாடை துறை என்பவர் கோவில் உள்ள விளக்குகளை போட்டு விட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார. காலை 8 மணி அளவில் கோவில் விளக்குகளை அணைத்து செல்ல வந்துள்ளார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பொதுமக்கள் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவிலில் சென்று பார்த்தபோது கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நேற்று இரவு அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி, 200 கிராம் வெள்ளி கிரீடம் மற்றும் ச உண்டியலை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கோவில் உண்டியலில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்திருக்கலாம் என தெரிவித்தனர். ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News