"ஒரு குவாட்டருக்கு 20 ரூபாய் கூடுதல் விலை" -மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு

டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்கள் ஒரு குவாட்டருக்கு 20 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பதாக மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு.

Update: 2021-06-18 16:36 GMT
அரியலூர்: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் அரியலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு மதுக்கடைகளில் 120 ரூபாய் ரக மது பாட்டில்களை 20 ரூபாய் கூடுதலாக வைத்து 140 ரூபாய் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் விற்பனை செய்வதாக மது பிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் உயர்தர மதுபான வகைகளுக்கு ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூபாய் 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் இதே போலவே கூடுதல் விலை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்வதாக மதுப்பிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News