அரியலூர் மாவட்டத்தில் தெருவோர வாழ் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2022-01-14 07:47 GMT

அரியலூரில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது.

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையத்தில் தரைக்கடைகள் வைத்துள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும், தெருக்களில் சுற்றித்திரியும் குழந்தைகள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் அதிகாரிகள் உதவி மையம் 1098ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரியலூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News