மீன்சுருட்டி காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு திடீர் நெஞ்சுவலி

மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதிக்கு திடீர்நெஞ்சுவலி : ஆபத்தான நிலையில் அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை

Update: 2022-04-08 05:23 GMT

விசாரணை கைதி ராபின்.

அரியலூர் மாவட்டம் சுத்துக்குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் ஏற்பட்ட வன்முறையில் அக்கிராமத்தை சேர்ந்த சிலரால் தாசில்தார் தாக்கப்பட்டு, தாசில்தார் வாகனம் சேதம் அடைந்தது. இச்சம்பவ வழக்கில் அக்கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளுக்கு கார் டிரைவராக இருந்த சுத்துக்குளம் தொரப்பூர் கிராமத்தை சேர்ந்த 24 வயதான ராபினை மீன்சுருட்டி போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென ராபினுக்கு நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து ராபினுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News