அரியலூர் அருகே சிறுவளூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

அரியலூர் அருகே சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-05 11:31 GMT

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை, ஊராட்சி தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள், தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவர்கள் சந்தோஷ், முரளி, சிறுநீரக மற்றும் நரம்பியல் நிபுணர் நிரஞ்சன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் சிகிச்சை அளித்து, ஆலோசனைகளை வழங்கினர். ஏற்பாடுகளை நெருஞ்சிக்கோரை இளவரசன், எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகர், ஊராட்சி செயலாளர் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News