அரியலூரில் ஆடி கடை ஞாயிறையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூரில் பால்குடம், அலகுகாவடி எடுத்து மார்க்கெட் தெரு வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-08-15 07:14 GMT

அரியலூரில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் பலகிராமங்களிலும் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல கோவில்களில் அம்மனுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், தயிர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

அரியலூர் நகரில் சேர்வைக்காரத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். செட்டியேரி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, அலகுகாவடி எடுத்து அண்ணா சிலை, மார்க்கெட் தெரு வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News