அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1047 கால்நடைகள் மருத்துவ பயன் அடைந்தன.

Update: 2022-02-24 08:45 GMT

திருமானூர் அருகே மேலராமநல்லூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், அழகியமணவாளன் ஊராட்சி, மேலராமநல்லூர் கிராமத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் செல்வராசு, ஊராட்சி துணை தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுதாபாலு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில், மேலராமநல்லூர் உள்ளிட்ட அழகியமணவாளன் ஊராட்சியை சேர்ந்த கிராமங்களை சேர்ந்த கால்நடைகளுக்கு, சினை பரிசோதனை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்களுக்கான தடுப்பூசி, பொது சிகிச்சை, நாய்களுக்கு வெரி நாய்க்கடி தடுப்பூசி போடுதல் போன்ற சிகிச்சை முறைகள், உதவி கால்நடை மருத்துவர்கள் மணிகண்டன், ரமேஷ், கால்நடை ஆய்வாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நசீமா, வசந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை முறைகளை மேற்கொண்டனர்.

முகாமில், 1024 கால்நடைகள் கலந்துகொண்டு சிகிச்சை பலன் பெற்றன. மேலும், முகாமில் கலந்துகொண்ட சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில், ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை துறையினர் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News