அரியலூரில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி

அரியலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக நாள் விழா மற்றும் சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெற்றது.

Update: 2022-04-23 12:28 GMT

அரியலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக நாள் விழா மற்றும் சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக நாள் விழா மற்றும் சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெற்றது.

புத்தக கண்காட்சியை எம்எல்ஏ கு.சின்னப்பா தொடங்கி வைத்து, முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசினார். அப்போது, உலகத் தலைவர்கள் அனைவரும், புத்தகங்களை வாசித்ததன் மூலம் தான் உயர்வான இடத்தினை அடைந்தார்கள். எனவே, மாணவர்களும் புத்தகங்கள் வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 3 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். முதல் நிலை நூலகர் ஸான்பாஷா வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் இ.மான்விழி, ஆசிரியர் தமிழினி இராமகிருஷ்ணன், தமிழ்க்களம் இளவரசன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மூன்றாம் நிலை நூலகர் செசிராபூ நன்றி கூறினார்.

Tags:    

Similar News