அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

Update: 2022-09-21 08:37 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 22.09.2022 (வியாழக்கிழமை) அன்றும், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிக்குளம் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் 23.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்றும், உடையார்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீழப்பழுவூர் குறுவட்டத்திற்கு 24.09.2022 (சனிக்கிழமை) அன்றும் நடைறெவுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் முகாமில், மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மட்டும் உரிய ஆவனங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News