அரியலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-09-28 06:47 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 01.01.2022  ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிடும் பொருட்டு, சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிற்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம்-6, 6A,7, 8 மற்றும் 8A) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இம்முகாம் நாட்களை பயன்படுத்தி 01.01.2022 நாளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News