அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 7257 சிறப்பு முகாம்கள்

அரியலூர் மாவட்டத்தில் நேற்றுமட்டும் கொரோனாவால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-10 03:05 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்றுமட்டும் கொரோனாவால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 69பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றிற்கு 49பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 4777 குணமடைந்துள்ளனர். நேற்றுவரை 4895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் நேற்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 979பேர். இதுவரை 1,40,496 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 4895பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,35,601பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 7257, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3,78,103 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 19,674பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 695பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 18,820பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 159பேர்.

கொரோனா நேற்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 750 பேர். இதுவரை மாவட்டத்தில் முன்தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 23654பேர். மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களிடம் இருந்து நேற்றுமட்டும் அபராதமாக வசூலிக்கப்பட்டது சுகாதாரத்துறையினர் ரூ.2,400 காவல்துறை 19,400 வருவாய்த்துறை 7,800, ஊராட்சிகள் 33,800 ஒருநாள் அபராதத்தொகை வசூல் 63,400ரூபாய். மொத்தமாக இதுவரை அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.49,19,800.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Tags:    

Similar News