அரியலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைது

செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

Update: 2021-12-05 11:19 GMT

சித்தரிக்கப்பட்ட படம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஓட்டகோவில் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சாகர்நாக்(37). இவர், தற்போது அரியலூரில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சுப்புராயபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவம் உண்மையென தெரியவந்ததையடுத்து சாகர்நாத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News