பாலியல் தொல்லை: அரியலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் கைது

அரயலூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழாசிரியர், மறைக்க முயன்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-24 12:57 GMT

பாலியல் புகார் கூறப்பட்ட அரசு பள்ளியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு விசாரணை நடத்தினார்.

அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவியிடம் தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் என்பவர் நேற்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் பொறுப்பு தலைமை ஆசிரியர் லதாவிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து பொறுப்பு தலைமை ஆசிரியர் லதா பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விசாரனை நடத்தியுள்ளார்.

இதில் அச்சம்பவம் உண்மை என்று தெரிந்ததையடுத்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தவகல் அளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் இன்று காலை பள்ளிக்கு வந்ததையடுத்து காட்டுப்பிரிங்கியம் கிராமமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அரியலூர் டி.எஸ்.பி மதன்,இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது தமிழ்ஆசிரியர் அருள்செல்வன் கடந்த மாதம் 10 ஆம் வகுப்பு மாணவியிடமும் பாலியல் தொந்தரவு செய்ததாக மற்றொரு மாணவியும் புகார் கொடுத்தார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சி செய்து மாணவியை சமாதானம் படுத்தியதாக கூறப்பகிறது.

இதன்பின்னர் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தமிழ்ஆசிரியர் அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும் குற்றத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியையும் கைதுசெய்துள்ள போலீசார் அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Tags:    

Similar News