வங்கி ஊழியர்களுடன் சைபர் குற்றங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்ற தடுப்பு பற்றி வங்கியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

Update: 2021-10-05 13:39 GMT

அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றத்தடுப்பு தொடர்பாக வங்கியாளர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பெரோஸ் கான் அப்துல்லா வழிகாட்டுதல்படி அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி முன்னிலையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் சைபர் குற்றங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சிவனேசன் ஆகியோர், வங்கி மேலாளர்களுடன் சைபர் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசித்தனர்.

இதில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாக தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்றும், ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வரும் போது அன்னியநபர்களின் உதவியை கோரவண்டாம் என்றும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வங்கி ஊழியர்கள்  ஒரு வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி வங்கியில் நடக்கும் மோசடிகள் குறித்து தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுமாறும், காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளரால் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News