பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தாட்கோ மூலம் கடனுதவி

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரமேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-09-01 10:25 GMT

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரமேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்: ஆதிதிராவிடர்களுக்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் (On-line) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சம் ஆகும்.

(அ) நிலம் வாங்கும் திட்டம், (ஆ) நிலம் மேம்பாடு திட்டம், (இ) துரித மின் இணைப்பு திட்டம், (ஈ) கிணறு அமைத்தல் திட்டம். தொழில் முனைவோர் திட்டம் (அ) பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், (ஆ). தொழில் முனைவோர் திட்டம். (அ) இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டம், (ஆ) மருத்துவமையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், இரத்தபரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல். சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்ட தொகையில் 50 சதவீத மானியம்.

தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்தோ / நகலினையோ, கைப்பிரதி, விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை, விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச்சான்றிதழ், சாதி சான்றிதழ் (எண்,வழங்கப்பட்ட நாள், வழங்கியவர் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்), குடும்ப ஆண்டு வருமான சான்றிதழ் (எண். வழங்கப்பட்ட நாள் வழங்கப்படுவதற்கான காரணம்), வருமானச் சான்றின் வயது 1 1/2 ஆண்டுக்குள் பெற்றிருக்கவேண்டும்).

பட்டா / சிட்டா (நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்), குடும்ப அட்டை எண், ஆதார் எண், விண்ணப்பதாரரின் தொலைபேசி / கைபேசி எண், விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி (e-mail address), திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும். தொலைபேசி / கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும், மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர, திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் பெற அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறை எண்.225, இரண்டாவது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும் (தொலைபேசி எண்.04329 - 228315). இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Tags:    

Similar News