ஜெயங்கொண்டம் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லூரி வளாகத்தில் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Update: 2022-04-21 14:51 GMT

ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார்.

பரப்ரம்மம் பவுண்டேஷன், பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் த.முத்துக்குமரன் 100 மரக்கன்றுகளை நட்டு மாணவ மாணவியர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி பேசும்போது

காடுகளில் மரங்கள் மனித சமுதாயத்தால் 25 சதவீதம் வரை அழிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மரங்கள் குறைந்துள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடவும் வேளாண்மைத்துறை மூலம் நடப்படும் சவுக்கு, தைலம் பகுதிகளில் வெட்டப்படாத ஏனைய மரங்கள் நடவேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது 20 மரங்களை வளர்க்க வேண்டும். உலகம் வெப்பமயமாதலை தடுக்க ஒரே வழி மரங்களை நடுவது தான் சிறந்தது, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு நாம் இயற்கையான சூழலை விட்டு செல்வது நமது கடமையாகும் என்றார்.

உட்கோட்டை பாலமுருகன், பதஞ்சலி மெஸ் சண்முகம்,பேராசிரியர்கள் மாரிமுத்து கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News