அரியலூரில் சாலைப் பணியாளர்கள் வாழைக்கன்று நட்டு ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-09 05:19 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் வாழைக்கன்று நட்டு நூதன கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அரியலூர் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்கத்தினர் இன்று வாழைக்கன்று நட்டு நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக முறைபடுத்தி ஆணை வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், கிராமபுற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது.

மேலும் பணிகாலத்தில் உயிர்நீத்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து சாலை பணியாளர்களின் வாழ்க்கையை வாழையடி வாழையாக தழைத்தோங்க செய்ய வேண்டும் என நூதன முறையில் வாழைமர கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News