அரியலூர்: சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது

விபத்தால் செந்துறை அரியலூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், பலமணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

Update: 2022-05-06 13:25 GMT

விபத்துக்குள்ளான லாரி. 

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளில்,  பல தனியார் சிமெண்டு ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இங்கிருந்து வெட்டப்படும் சுண்ணாம்புக் கற்கள், அரியலூர் பகுதிகளில் உள்ள சிமெண்டு ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

நேற்று மதியம் சுண்ணாம்புக்கல் ஏற்றிக் கொண்டு அரியலூர் நோக்கி சென்ற லாரி,  கட்டையன்குடிக்காடு கிராமம் டாஸ்மாக் கடை அருகே தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த சுண்ணாம்பு கற்கள் சாலை முழுவதும் கொட்டி கிடந்தன. பல மணி நேரம் செந்துறை அரியலூர் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார்,  சம்பவ இடத்திற்கு சென்று லாரியை அப்புறப்படுத்தியதோடு சுண்ணாம்புக் கற்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர். பொதுமக்கள் அதிகளவில் பயணிக்கும் இந்த சாலையில் கத்திரி வெயில் காரணமாக லாரி கவிழ்ந்தபோது யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை.

Tags:    

Similar News