திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

Update: 2022-05-09 09:24 GMT

திருமானுரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் (தனியார் திருமண மண்டபத்தில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், திருமானூர் ஒன்றிய 11- வது மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பரிசுத்தம், மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். திருமானூரை தலைமையிடமாக கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம், நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். திருமானூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும். வேட்டக்குடி ஏரி, சுக்கிரன் ஏரி மற்றும் நந்தியாறு வாய்க்கால்களில் சேதமடைந்த மதகுகளை சரிசெய்து, ஷட்டர் பலகை அமைக்க வேண்டும். வேட்டக்குடி, கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News