நகர்ப்புறதேர்தலில் கொரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகோள்

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

Update: 2022-02-08 07:47 GMT

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறம் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழி காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்துவதற்கு 1000 நபர்கள் அல்லது கூட்டம் நடக்கும் இடங்களில் 50 சதவீதம் கொள்ளவுக்கு மிகாமல் கலந்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

முகக்கவசம் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறவும், கூட்டங்கள் நடைபெற உள்ள இடத்தை நேரடி ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கவும் மற்றும் அரங்குகளில் கட்சி கூட்டமோ, வேட்பாளர்கள் கூட்டமோ நடத்தினால் அதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த சான்று பெற வேண்டும். இதற்கு அந்தந்த தேர்தல் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், இதற்கு 500 நபர்கள் அல்லது அரங்கின் கொள்ளளவில் 50 சதவீதத்துக்கு மிகாமல் கலந்து கொள்ளவும் அனுமதிக்கலாம்.

மேலும், அரசியல் கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். எனவே அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News