சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அம்பேத்கர் சிலை மாற்றம்

திருமானூரில் சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த அம்பேத்கர் சிலை வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

Update: 2022-01-25 07:16 GMT

அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் கடந்த 1993 ம் வருடம் ஜூன் மாதம், பாமக சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலையை பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் திறந்து வைத்தார். இந்நிலையில், தற்போது, பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, திருமானூரில், பெட்ரோல் பங்க் முதல் பயணியர் மாளிகை வரை, விபத்து பகுதியாக சாலை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சாலை விரிவாக்கத்தில் அம்பேத்கர் சிலை நடுவில் இருந்தது.

இந்நிலையில், அம்பேத்கர் சிலை,  தேசிய நெடுஞ்சாலை, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் விஜயலெட்சுமி, பாமக மாவட்ட தலைவர் ரவிசங்கர், பாமக தொகுதி செயலாளர் தர்ம்பிரகாஷ் மற்றும் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், அம்பேத்கர் சிலை, அந்த இடத்திலிருந்து பொக்லின் எந்திரம் மூலம், தூக்கி வேறு இடத்தில் வைக்கப்பட்டது.

மேலும், இந்த அம்பேத்கர் சிலையானது, ஏற்கனவே, சிலை இருந்த இடத்திற்கு பின்னால், வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், அம்பேத்கர் சிலை எடுக்கப்பட்ட இடத்தில், சாலை விரிவாக்கத்திற்கான பணிகளும் தொடங்கியது.

Tags:    

Similar News