உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரியலூரில் 94 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரியலூரில் 94 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

Update: 2022-04-04 14:33 GMT

அரியலூரில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.


அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, அகற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (04.04.2022) அரியலூர் வட்டம், மேலத்தெரு புல எண் மற்றும் வகைப்பாடு.449-1, அரசு நிலையிட்டான் ஏரியில் 12.37.5 ஹெக்டேர் பரப்பும், புல எண் மற்றும் வகைப்பாடு..449-2 குறிஞ்சான் ஏரியில் 9.15.50 ஹெக்டர் பரப்பும் என மொத்தம் 21.53.0 ஹெக்டர் பரப்பளவில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கையான 124 வீடுகளில் இன்றைய தினம் 94 வீடுகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மொத்தப்பரப்பு 2.42.00 ஹெக்டர் ஆகும்.

மேலும், மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் நாளைய தினம் அகற்றப்படும். இவர்களில் 72 நபர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேளூர், மண்ணூழியில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News