அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

Camp Publication- அரியலூர் மாவட்டம் காட்டாத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.33,51,910 நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-07-29 07:47 GMT

ஜெயங்கொண்டம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Camp Publication- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், காட்டாத்தூர் ஊராட்சியில், தமிழக முதல்வர்  உத்தரவிற்கிணங்க,"மக்கள் தொடர்பு முகாம்" அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ம.ச.கலைவாணி தலைமையில் நடைபெற்றதில், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சா.பரிமளம் வரவேற்றார். ஆண்டிமடம் வட்டாட்சியர் கா.மு.கண்ணன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமார்,வேளாண் அட்மா குழு தலைவர் க.தர்மதுரை,ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனசேகர்,தனராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி செல்வமணி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவேல் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பயணாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 150 பயனாளிகளுக்கு ரூ.33,51,910 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News