டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

அரியலூர்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-05-09 13:29 GMT

அரியலூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

அரியலூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இச்சாலை வழியாகத்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு வரக்கூடிய குடிமகன்கள் மது அருந்திவிட்டு அவ்வழியாக செல்லக்கூடிய பெண்கள் மற்றும் மாணவிகளை கொச்சை வார்த்தைகளால் பேசுவதால் பெண்கள் வெளியில் செல்ல தயங்கி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News