சுண்ணாம்புக்கல் சுரங்கம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கீழப்பழுர் தனலட்சுமி திருமண மஹாலில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 17ம்தேதி காலை 10மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-05-13 13:04 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கருப்பூர் சேனாபதி கிராமத்தில் அமைந்துள்ள சரவணன், மேலாண்மை இயக்குநர், தண்டபாணி சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், செயல்பாட்டில் இருக்கும் சுண்ணாம்புக்கல் சுரங்க விஸ்தீரணம் - 4.67.0 ஹெக்டேர் புல எண். 6/4, 8/3, 8/4A, 8/4B, 8/5A, 8/5B, 8/5C, 8/5E, 8/6A, 8/6B, 8/6C, 7 & 8, கருப்பூர் சேனாபதி கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் தனலட்சுமி திருமண மஹால், அருணாச்சல நகர், கீழப்பழுர் கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 17.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பொது மக்கள் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொது மக்கள் தங்களின் கருத்துக்களை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு மறு நடவடிக்கைக்காக மாநில சுற்றுசசூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News