அரியலூரில் வரும் 24-ம் தேதி கழிவு வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கழிவுவாகனங்கள் 25ம்தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும்.

Update: 2022-03-21 13:53 GMT

ஏலம் விடப்படவுள்ள கழிவு வாகனங்கள்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 07 எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 24-ம் தேதி மாலை 05.00 மணி வரை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 25ஆம் தேதி அன்று காலை 09.00 மணிக்கு ரூபாய் 1000/- முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News