அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரூ.1.85 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2022-03-01 15:27 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.85 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டு, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.62,500 மதிப்பில் திறன் பேசியும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,950 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,450 மதிப்பில் சக்கர நாற்காலியும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,620 மதிப்பில் ஊன்றுகோல்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,176 மதிப்பில் பிரெய்லி வாட்ச்களும் என மொத்தம் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,85,196 மதிப்பில் விலையில்லா உதவி உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News