டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பானையாளர்கள் பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்தனர்.

Update: 2021-10-07 04:47 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மது பான விற்பானையாளர்கள் மனு அளிக்க வந்த போது எடுத்தப்படம்

அரியலூர் மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம்‌ மனுஅளித்தனர்.

மனுவில் காஞ்சிபுரம் மாவட்ட விற்பனையாளர் துளசிதாஸை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இறந்த பணியாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்‌ உதவி தொகை மற்றும் வாரிசுக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு கல்வி  செலவை அரசே ஏற்க வேண்டும்.

அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை தொகையினை நிர்வாகமே நேரடியாக வங்கி மூலம் வசூல் செய்து கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் துளசிதாஸிக்கு நடந்தது போல் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் எங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டகலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மனுஅளித்தனர்.

Tags:    

Similar News