அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் மனு

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-06-21 10:08 GMT

அரியலூரை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை தடை விதித்து அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை தடை விதித்து, அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ் நாடு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தினால் டெல்டா பகுதியான அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஜெயங்கொண்டம் செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே தமிழ்நாடு அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்க்கு தடை விதித்து, சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாய சங்க சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டது.


Tags:    

Similar News