விலைவாசி உயர்வுக்கு எதிராக அரியலூரில் காங்கிரஸ் விழிப்புணர்வு பேரணி

விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2021-11-26 10:42 GMT

விலைவாசி உயர்வுக்கு எதிராக அரியலூரில்  காங்கிரஸ் கட்சி சார்பில்  பேரணி நடத்தப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S. அழகிரி அறிவுறுத்தலின்படி மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையால், இந்தியாவின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு, கடும் விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பதாக கூறி அரியலூர் நகரில், அரியலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் ஏ. சங்கர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேருந்துநிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய இந்த  விழிப்புணர்வு பேரணியை மாநிலத் துணைத் தலைவர் ஜி. இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் மனோகர், வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், சீனிவாசன், சீமான்,  திருநாவுக்கரசு, முத்துசாமி,

மாவட்ட துணைத்தலைவர்கள் ராகவன், பழனிச்சாமி, தியாகராஜன், கலைச்செல்வன், மாநில பிரதிநிதிகள் ராஜசேகர், பூண்டி சந்தானம், மாவட்ட செயலாளர்கள் அமானுல்லா, சகுந்தலாதேவி, அலெக்ஸ், சந்திரஹாசன், சுண்டக்குடி செல்வராஜ், வில்பர்ட், துணை அமைப்பு தலைவர்கள் மகிளா காங்கிரஸ் மாரியம்மாள், மிழிஜிஹிசிதர்மா விஜயகுமார், தொகுதி இளைஞர், ராஜா, காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கங்காதுரை, பிரம்மதேவன், மலேசியா மணி, பூமி உடையார் நகர காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஏ ஆர் செந்தில்வேல், ஆட்டோ ராஜ்குமார் ஆண்டனிதாஸ், ஜோதிபாசு, செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் காமராஜர் திடலில் நிறைவு பெற்றது. இறுதியில் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News