அரியலூரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு: ஆட்சியர் தகவல்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

Update: 2022-01-05 07:20 GMT

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் 05.01.2022 முதல் 07.01.2022 வரையிலும் மற்றும் 10.01.2022 முதல் 12.01.2022 வரையிலும் நடைபெற இருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவி வரும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. பொது மக்கள் நலன் கருதியும், உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.01.2022 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்க்காணல் 05.01.2022 முதல் தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நேர்க்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News