அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.

Update: 2022-06-20 07:04 GMT

அரியலூர் நகரில் போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அரியலூர் நகரில் போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு.

திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் A. சரவண சுந்தர் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி, அரியலூர் நகரில் இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி காவல்துறை சார்பில் எடுத்துறைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. அரியலூர் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News