அரியலூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கையுந்து பந்து போட்டி.

அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் -பொது மக்கள் இடையே நல்லுறவு கையுந்து பந்து போட்டி நடந்தது.

Update: 2021-09-26 07:34 GMT

கையுந்து பந்து போட்டியில்  வெற்றி பெற்ற அணிக்கு மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிசு வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.வளவெட்டிகுப்பம் கிராமத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை, அரியலூர் மாவட்ட கையுந்து கழகம் மற்றும் த.வளவெட்டிகுப்பம் புரட்சிப்புயல் விளையாட்டு கழகத்துடன் இணைந்து அரியலூர் மாவட்ட அளவில் கையுந்து விளையாட்டுப் போட்டி நடத்தியது.

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்கும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் , இளைஞர்களிடையே சமூக ஒற்றுமையை வளர்க்கும் நோக்கிலும் இந்த  விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் பூமிநாதன், சுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் கோவிந்தசாமி, ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்கள்.

செந்துறை அணியினர் முதலிடத்தையும், வளவெட்டிக்குப்பம் அணியினர் 2ம்இடத்தையும், இரும்புலிக்குறிச்சி அணியினர் 3ம் இடத்தையும், அரியலூர் ஆயுதப்படை காவல் விளையாட்டு வீரர்கள் 4வது இடத்தையும் பெற்றனர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன்,  காவல் உதவி ஆய்வாளர் பாலாஜி, காவலர் தர்மராஜ், ஆயுதப்படை காவலர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News