பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

Update: 2022-03-16 12:59 GMT

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா‌.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி , அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்விஜயலட்சுமி தலைமையில் அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் பிரிவு காவல்துறையினர் , உமன் ஹெல்ப் டெஸ்க் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

விளந்தை, வீராகளூர், சூரப்பள்ளம், எருத்துக்காரன்பட்டி, மகாலிங்கபுரம், ஜெயராமபுரம், கோவிந்தபுரம், சுப்புராயபுரம் மற்றும் மணக்கால் ஆகிய 9 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டுபிரசுரங்கள் அளித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News