ஜெயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி மனு

கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடக் கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-04-07 08:15 GMT

ஜெயங்கொண்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜெயங்கொண்டம் அருகே கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடக் கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நாட்டார் ஜெயபால் தலைமை வகித்தார். நாட்டார்கள் தங்கசாமி பாலையா மெய்யழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் கந்தன் பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் கொளஞ்சி ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பசுபதி மற்றும் பபிதா திருஞானம் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காந்தி பூங்காவில் இருந்து மனுவுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மீனாவிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இறுதியில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News