அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் 20,000 பேருக்கு பேனா வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-03-08 12:49 GMT

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவருக்கு பேனாவை வழங்கிய கோட்டாட்சியர் ஏழுமலை.




அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், சென்னை தனியார் தொண்டு நிறுவனம் (எண்ணங்களின் சங்கமம்), அரியலூர் இளைஞர்கள் அமைப்பு மற்றும் ரெனால்ட்ஸ் பென் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் 20,000 பேருக்கு ரூ.2,70,000 மதிப்பில் பேனா வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட முதன்மை கல்வி மு.ராமன், மாவட்ட கல்வி அலுவலர் இ.மான்விழி ஆகியோர் பங்கேற்று கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவ,மாணவிகளுக்கு பேனாக்களை வழங்கினர்.

தொடர்ந்து, குருவாடி, கா.அம்பாபூர், வெளிப்பிரிங்கியம், புதுப்பாளையம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், விளாங்குடி உட்பட 15 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், மாணவர்களின் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.இளவரசன், பள்ளி தலைமையாசிரியர் மு.சாமிதுரை ஆகியோர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News