கேஸ் சிலிண்டர் விலையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை

கேஸ் சிலிண்டர் விலையை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-12-30 06:06 GMT

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அரியலூர் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரியலூர் கேஸ் சிலிண்டர் விலையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை மாவட்ட வருவாய் அலுவலர் எச்சரிக்கை செய்தார். 

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அரியலூர் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பில் தொகையை விட கூடுதலாக சிலிண்டருக்கு வசூல் செய்வதாக கூறினர். மேலும் சிலிண்டரை வீட்டிற்கு கொண்டு வராமல் வீதியிலேயே டெலிவரி செய்வதாகவும் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வந்திருந்த முகவர்கள் பதிலளித்தனர். எரிவாயு உருளையின் டெலிவரி செய்பவர்கள் சீருடை அணிந்து வரவேண்டும். பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண்களை மாற்றினால் உடனடியாக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கேஸ் சிலிண்டர் விலையை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் எச்சரிக்கை விடுத்தார். கூட்டத்திற்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News