நடுவலூர் கிராமத்தில் உரக்கடையினை தற்காலிகமாக மூட உத்தரவு

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2022-08-04 14:28 GMT

பைல் படம்


அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் மூலம் ஆய்வு செய்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தா.பழூர் வட்டாரத்தில் நடுவலூர் கிராமத்தில் உள்ள தனியார் உரக்கடையினை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உரம் விற்பனை இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை முனை இயந்திரத்தில் இருப்பு போன்றவற்றை முறையாக பராமரிக்காமலும் பில் இன்றி உர விற்பனை செய்தது போன்ற காரணங்களுக்காக தற்காலிகமாக மூடுவதற்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வேளாண்மை உதவி இயக்குநர் தா.பழூர் அவர்கள் உர கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் பிரிவு 4(A), 4(B) மற்றும் பிரிவு 5 ன் படி இருப்பு பதிவேடு பராமரிக்காதது, முறையாக பில் இட்டு விற்பனை செய்யாதது போன்ற காரணங்களுக்காக பிரிவு 28(2)ன் படி விற்பனை தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக உரக்கடை மூடப்பட்டுள்ளது. மேலும் சூப்பர் பாஸ்பேட் 9.65 மெ.டன், பொட்டாஷ் 1.2 மெ.டன், 16:16:16 காம்ப்ளக்ஸ் உரம் 2.05 மெ.டன் மற்றும் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் உரம் 16.35 மெ.டன் ஆகிய உரங்கள் பிரிவு 28(1)D-ன் படி முடக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தா.பழூர் மற்றும் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால், வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) 9487073705, அரியலூர் வேளாண்மை உதவி இயக்குநர் 9443180884, செந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் 9884632588, திருமானூர் வேளாண்மை உதவி இயக்குநர் 8072890022, ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் 9750890874, ஆண்டிமடம் வேளாண்மை உதவி இயக்குநர் 9486164271, தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குநர் 8248928648 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், வட்டார அளவில் அரியலூர், உர ஆய்வாளர் 7502821228, செந்துறை, உர ஆய்வாளர் 9884632588, திருமானூர், உர ஆய்வாளர் 7010178765, ஜெயங்கொண்டம் உர ஆய்வாளர் 7200233393, ஆண்டிமடம்;, உர ஆய்வாளர் 9943648446, தா.பழூர் உர ஆய்வாளர் 9626650287 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை முனை கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும். அதேசமயம் விவசாயிகள் விற்பனை முனை கருவி மூலம் உரம் பெற கண்டிப்பாக ஆதார் எண் கொண்டு செல்ல வேண்டும்.

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது மற்ற இடுபொருட்களை சேர்த்து வற்புறுத்தி விற்பனை செய்தாலோ, மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் இரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News