படைக்கலன் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவு

படைக்கலன் உரிமம் பெற்ற (Arms Licences) உரிமைதாரர்கள் அனைவரும் ஆஜர்படுத்தி தணிக்கை செய்திட வேண்டும்.

Update: 2022-05-17 09:38 GMT

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் காலங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நன்முறையில் நடத்திட மாவட்டத்திலுள்ள அனைத்து படைக்கலன் உரிமம் பெற்ற (Arms Licences) உரிமைதாரர்கள் அனைவரும் தங்களது படைக்கலனை (Arms) மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இயங்கும் படைக்கலன் தணிக்கை குழுவின் முன்பாக ஆஜர்படுத்தி தணிக்கை செய்திட வேண்டும். இவ்வாறு தணிக்கை குழு முன்பு ஆஜர்படுத்தாது படைக்கலன்களை வைத்திருக்கும் படைக்கலன் உரிமைதாரர் மீது சட்டரீதியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News