தூத்தூர், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

தூத்தூர், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-29 07:55 GMT

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் 2020-2021 -ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், இரண்டாம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில், தூத்தூர் கிராமத்தில் 30.07.2021 மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் 04.08.2021 முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரியலூர் வட்டத்தில், தூத்தூர் கிராமம் மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில், முட்டுவாஞ்சேரி கிராமத்தில் கொள்முதல் நிலையம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News