பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட செவிலியர்கள்

ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-08-16 09:25 GMT

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா இரண்டாம் அலையின் போது தற்காலிக பணியாளர்களாக சுமார் 20 செவிலியர்கள்பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு மருத்துவமணையில் தற்காலிகமாக கொரோனா இரண்டாம் அலையின் போது பணியாற்றிய செவிலியர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில்,  கொரோனா இரண்டாம் அலையின் போது, தற்காலிக பணியாளர்களாக சுமார் 20 செவிலியர்கள் பணிபுரிந்தனர். செவிலியர்கள் 90 நாட்களுக்கு பணியாற்றிய பிறகு,  தொடர்ந்து செவிலியர் பணியாற்றிட நிர்வாகம் அனுமதி  மறுத்துவிட்டது. செவிலியர்கள் பணியாற்றிய காலங்களில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஊக்கத்தொகையும் இல்லாமல் பணி செய்து வந்த செவிலியர்களுக்கு, தற்போது பணி நீட்டிப்பும்  வழங்கவில்லை . தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய வேலையை விட்டு விட்டு அரசு பணிக்கு வந்த நிலையில், தற்போது பணி நீட்டிப்பு இல்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே, தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கோரியும், மூன்றுமாத ஊதியத்தை வழங்க ஆனைபிறப்பிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுயிட்டனர். பின்னர் கோரிக்கைகனை வலியுறுத்தி முழக்கமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, செவிலியர்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் வழங்கிவிட்டு கலைந்துசென்றனர்.

Tags:    

Similar News