அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை அறிவிப்பு

கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

Update: 2021-08-25 09:20 GMT

அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் என்.நாகராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு 24.08.2021 முதல் 15.09.2021 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது. கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- Debit card/ Credit card/ Net banking வாயிலாக செலுத்த வேண்டும். தகுதியான மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் மேற்கண்ட நிலைய முதல்வர்களை நேரில் அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி வாயிலாகவும், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879 என்ற தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் என்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News