தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-09 17:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்தது 2021-2022 ஆம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு, பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in விண்ணப்பிக்க 15.12.2021 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அறிவிப்பு பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News